General25 August 2026

இரத்மலானை வானூர்தி நிலையத்தில் சிறிய ரக வானூர்தி விபத்து

பயிற்சி விமானி ஒருவர் இயக்கிய சிறிய ரக வானூர்தி, இரத்மலானை வானூர்தி நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானிக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வானூர்தி சேதமடைந்துள்ளதைத் தொடர்ந்து, இரத்மலானை வானூர்தி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வானூர்தியை அப்புறப்படுத்தி, வானூர்தி நிலையத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கான சீரமைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes