நாட்டின் சில பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என இன்று வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அநுராதபுரம், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில பகுதிகளில் சிறிய அளவிலான மழை பெய்யக்கூடும்.
அத்துடன், அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
Latest News
ஃபிஃபா தலைவருக்கு எதிராக சுவிட்ஸர்லாந்தில் வழக்கு -தயாராகும் ஆவணங்கள்!
Local
28 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது தாக்குதல்
Local
28 August 2026
ஆயுள் தண்டனை பெற்றிருந்த பொஸ்னிய படையதிகாரி சிறைக்குள் மரணம்!
Local
28 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்ற ஈரான் - கட்டார் கூட்டுத் திட்டம்: தெஹ்ரானில் முக்கிய பேச்சுவார்த்தை!
Local
28 August 2026
நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கையிடமிருந்து நிவாரணப் பணிகளுக்காக 1 மில்லியன் டொலர் நிதியுதவி!
Local
27 August 2026
மாத்தறையில் தம்பதியர் கைது: ரூ. 70 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!
Local
27 August 2026
குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பு விளக்கம்!
Local
27 August 2026
சுவிங்கம் பிரியரா நீங்கள் ? சைலிட்டால் இனிப்பூட்டி ஆபத்தானது தெரியுமா? இதயத்தைப் பதம் பார்க்கும் அதிர்ச்சித் தகவல்!
Local
27 August 2026
25 வருடங்களுக்கு பின்னர் பிரையன் லாராவின் சாதனையை முறியடித்த சொனால் தினுஷ
Local
27 August 2026
தமிழக சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்! திமுக – தவெக உறுப்பினர்களிடையே கடும் கருத்து மோதல்
Local
27 August 2026