General31 August 2026

அர்ச்சுனாவிற்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (31) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (31) இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இந்தநிலையில், இந்தக் கோரிக்கை தொடர்பில் உரிய நேரத்தில் கட்டளை பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
Related recommendation
Hiru TV News | Programmes