கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாவது கட்ட வளர்ச்சிப் பணிகளில் பல்வேறு முறைகேடுகளும் குறைபாடுகளும் காணப்படுவதாக துறைமுகத்தின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற துறைமுக பொறியியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 2020-2022 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு, 2025 ஜனவரி 03 ஆம் திகதியளவில் நிறைவடையவிருந்த போதிலும், மேலும் ஒன்றரை ஆண்டுகள் கடந்தாலும் இதனை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திட்ட முகாமைத்துவப் பிரிவும் ஆலோசனைக்குழுவும் தனித்தனியாகச் செயற்பட வேண்டும் என்ற போதிலும், ஒரே தரப்பினர் இரு பிரிவுகளிலும் செயற்படுவதால் பக்கச்சார்பற்ற தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும், திட்டத்தின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இவ்வளவு பெரிய திட்டத்திற்கு இதுவரை நிலையான பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை எனவும், அமைச்சரவை அனுமதியின்றி மூன்று முறை திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், சில கொடுப்பனவுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுவதாகவும், துறைமுக அதிகார சபையின் அனுமதியின்றி கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் துறைமுக அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest News
கெஹெல்பத்தர பத்மேவின் விளக்கமறியல் நீடிப்பு
Local
03 September 2026
இணையப் பாதுகாப்பில் காத்திருக்கும் பேராபத்து: சமூக ஊடகங்களால் பாதிக்கப்படும் சிறுவர்கள் – 21 நாடுகளின் அதிர்ச்சி அறிக்கை!
Local
03 September 2026
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது சென்னை மேல்நீதிமன்றம்!
Local
03 September 2026
உடற்தகுதி பரிசோதனை இல்லாமலேயே இங்கிலாந்து தொடருக்கு குசல் மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டாரா?
Local
03 September 2026
"குற்றம் செய்தவருக்கே அதன் தீவிரம் தெரியும்": நாமல் ராஜபக்ஷ குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கருத்து!
Local
03 September 2026
ஹோர்முஸ் நீரிணைக்கு 'ட்ரம்ப் நீரிணை' என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
Local
03 September 2026
தண்டனையிலிருந்து விலகும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு அரசாங்கத்திற்கு அழுத்தம்
Local
03 September 2026
ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
Local
03 September 2026
அமெரிக்காவின் $1 நாணயத்தில் டொனால்ட் ட்ரம்பின் உருவம்: அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திற்கு வந்தது!
Local
03 September 2026
கொழும்பின் பல பகுதிகளில் இன்று 24 மணி நேர நீர் விநியோகம் தடை
Local
03 September 2026