நாட்டின் சில பகுதிகளில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளிலும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Latest News
ரொபோக்களின் விநோத போராட்டம்: மனிதர்களுக்குப் பதிலாக களமிறங்கி கோரிக்கை விடுத்த இயந்திர மனிதர்கள்!
Local
11 September 2026
கனடாவின் புதிய சாதனை: நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்!
Local
11 September 2026
கிரிக்கெட் கழகங்களைத் தரம் மாற்றிய விவகாரம்: நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உத்தரவு!
Local
11 September 2026
ஒரே நாளில் மோதிக்கொண்ட சர்தார் 2 மற்றும் மண்டாடி: வசூலில் சாதனை படைத்த விபரங்கள்!
Local
11 September 2026
நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
Local
11 September 2026
இணையத்தில் தீயாய் பரவும் செல்ஃபி: அஜித்குமாரின் பந்தயத்தை நேரில் காண்பாரா த்ரிஷா?
Local
11 September 2026
இந்தியாவில் மீட்கப்பட்ட ஒராங்குட்டான்கள்: இந்தோனேசியாவுடன் கூட்டு விசாரணை - வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!
Local
11 September 2026
ஏஐ மாடல்களைப் பயன்படுத்தி உயிரியல் ஆயுதம் தயாரிக்க முயன்ற விஞ்ஞானிகளின் கணக்குகள் முடக்கம்!
Local
11 September 2026
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சி விலகல்: ரஞ்சித் மத்தும பண்டார அறிவிப்பு
Local
11 September 2026
மாகாண சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு? - கொதித்தெழுந்த எதிர்க்கட்சி!
Local
11 September 2026