தொழிற்கல்விப் பிரிவுகள், தொழில் வழிகாட்டல் மற்றும் வெளிநாட்டு மொழிகளைக் கற்கும் வாய்ப்புகளும் மாணவர்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற, புதிய கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான நாடாளுமன்ற துணைக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள GPA என்ற நிலைப் புள்ளி சராசரி முறைக்கு பதிலாக, ஒவ்வொரு பாடத்தின் தன்மைக்கு ஏற்ப இறுதி பெறுபேற்றை கணக்கிடும் ‘Weighted Average Marks’ எனப்படும் நிறையிடப்பட்ட சராசரி மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், புதிய ஆரம்பக் குழந்தைப் பருவ பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் வழிகாட்டி கையேட்டின் அடிப்படையில், 2027 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள முன்பள்ளி அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார்.
தேசிய கொள்கைக்கு அமைவாக முன்பள்ளி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்புகள், கல்வித்துறையில் உள்ள அனைத்து தொழில்சார் தரப்பினரின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், அதன் முழுமையான பயனை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக அனைத்து தரப்பினரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, இலங்கையின் பொதுக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு, தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான கருத்தியல் ஆவணம் மற்றும் பாடசாலை மட்ட மதிப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கலுக்கான கட்டமைப்பு ஆகிய கொள்கை ஆவணங்கள் கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும், அவை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
வான்கடே மைதானத்தின் சிறப்பு வரவேற்பறைகளுக்கு சூட்டப்படவுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள்: மும்பை கிரிக்கெட் சங்கம் தீர்மானம்!
Local
12 September 2026
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் திசைதிருப்பும் தற்போதைய அரசு: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
Local
12 September 2026
அஜித் - விஜய் சந்திப்பால் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன
Local
12 September 2026
சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை
Local
12 September 2026
கொழும்பு இசை நிகழ்ச்சி சர்ச்சை: நியோ தரப்பில் குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
Local
12 September 2026
பட்டாசு வெடித்து 13 வயது சிறுவன் பலி! ஆலய உற்சவத்தில் நடந்த கொடூரம்
Local
12 September 2026
62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் நாளை மறுதினம் முதல் டெங்கு கட்டுப்பாட்டு வாரம்
Local
12 September 2026
AI நிழற்படங்கள் குறித்து அதிருப்தி: கிளியான் எம்பாப்பே கவலை!
Local
12 September 2026
செங்கடல் நுழைவாயிலைக் கைப்பற்றிய ஹவுதிகள்: சவூதி எண்ணெய் குழாய்ப் பாதை தற்காலிகமாக மூடல்!
Local
12 September 2026
2030 உலகக் கிண்ண இறுதிப்போட்டி: மொரோக்கோவின் உரிமைக்கோரலுக்கு ஃபீஃபா மறுப்பு
Local
12 September 2026