இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைகளை நிறைவு செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், வினைத்திறன் தடைகளை நிறைவு செய்ய வேண்டிய தேவையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
எனினும், அடுத்த பதவி உயர்வைப் பெறுவதற்கு முன்னர் குறித்த வினைத்திறன் தடையை நிறைவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒருவர் பதவி உயர்வு பெற்ற தரத்திற்கு முன்னதாக நிறைவு செய்ய வேண்டிய வினைத்திறன் தடையை, அடுத்த பதவி உயர்வு பெறும் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டும்.
எனினும் தற்போது அந்த நிபந்தனையின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளும், அந்த முந்திய தரத்திற்கான வினைத்திறன் தடையை நிறைவு செய்ய வேண்டிய தேவையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல், தங்களுக்கு உரிய தரத்திற்கான வினைத்திறன் தடையகப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி வரையான காலப்பகுதியில் தரப் பதவி உயர்வுக்கு தகுதி பெறும் ஆசிரியர்களுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, வினைத்திறன் தடையகப் பரீட்சைகளை நிறைவு செய்துள்ளார்களா என்பதை கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு தரப் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கும் வகையில் கல்வி அமைச்சின் சுற்றறிக்கை ஒன்று எதிர்வரும் காலத்தில் வெளியிடப்படவுள்ளது.
Latest News
அஜித் - விஜய் சந்திப்பால் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன
Local
12 September 2026
சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை
Local
12 September 2026
கொழும்பு இசை நிகழ்ச்சி சர்ச்சை: நியோ தரப்பில் குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
Local
12 September 2026
பட்டாசு வெடித்து 13 வயது சிறுவன் பலி! ஆலய உற்சவத்தில் நடந்த கொடூரம்
Local
12 September 2026
62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் நாளை மறுதினம் முதல் டெங்கு கட்டுப்பாட்டு வாரம்
Local
12 September 2026
AI நிழற்படங்கள் குறித்து அதிருப்தி: கிளியான் எம்பாப்பே கவலை!
Local
12 September 2026
செங்கடல் நுழைவாயிலைக் கைப்பற்றிய ஹவுதிகள்: சவூதி எண்ணெய் குழாய்ப் பாதை தற்காலிகமாக மூடல்!
Local
12 September 2026
2030 உலகக் கிண்ண இறுதிப்போட்டி: மொரோக்கோவின் உரிமைக்கோரலுக்கு ஃபீஃபா மறுப்பு
Local
12 September 2026
ஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவையில் இன்று பிரம்மாண்ட மக்கள் பேரணி!
Local
12 September 2026
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உணவு தவிர்ப்பு போராட்டம்
Local
12 September 2026