General13 September 2026

இலங்கையின் தூயதமிழுக்கு தென்னிந்திய பின்னணிப்பாடகியின் புகழாரம்!

இலங்கை தமிழ் மக்களின் மொழித்தூய்மையையும், சூரியன் செய்திச் சேவையின் தூய்மையான தமிழ் செய்தி அறிக்கையையும் பிரபல பின்னணிப் பாடகி சாந்தி பாராட்டியுள்ளார்.

இலங்கை அன்பிற்குப் பெயர்போன நாடாகவும், தமிழ் மொழியைப் பாதுகாத்து வரும் மண்ணாகவும், வரலாற்றுப் பெருமை கொண்ட நாடாகவும் திகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் பேசும் தூய்மையானதும் இனிமையானதுமான தமிழ் மொழி தனிச்சிறப்பு வாய்ந்தது என்றும் பாடகி சாந்தி தெரிவித்துள்ளார்.

பல செய்தி அறிக்கைகளைக் கேட்டிருந்தாலும், சூரியன் செய்திச் சேவை மிகவும் தூய்மையான மற்றும் தெளிவான தமிழில் செய்திகளை வழங்கி வருவது பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மத்திய மலைநாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு தனது அன்பையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொண்ட பாடகி சாந்தி, இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் சூரியன் செய்தி ஊடகத்திற்கும் தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes