General15 September 2026

தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபரும், தப்பிச் செல்ல உதவிய சாரதியும் கைது

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபரும், தப்பிச் செல்ல உதவிய சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதி தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

கைக்குண்டு தாக்குதலுக்காக முச்சக்கரவண்டி வழங்கியவர் உள்ளிட்ட இருவர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபரும், தப்பிச் செல்ல உதவிய சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes