General15 September 2026

2027ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

2027ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2027ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காகக் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்குச் சட்டமா அதிபரின் ஆலோசனையும் ஒப்புதலும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர், அதன் அங்கீகாரத்துக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes