General16 September 2026

நாட்டில் கடந்த ஆண்டில் வேலையின்மை விகிதம் 3.9 வீதமாகப் பதிவு

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைக்காலத் தரவு அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் வேலையின்மை விகிதம் 3.9 வீதமாகக் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, தேசிய ரீதியிலான தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 49.4 வீதமாக உள்ளது.

17 மில்லியனுக்கும் அதிகமாக உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில், சுமார் 8.6 மில்லியன் பேர் பொருளாதார ரீதியாக எவ்வித தீவிரப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்று அந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும், சில தொழிலாளர்களுக்கான வேலைப் பாதுகாப்பு தொடர்ந்தும் வரம்பிற்குட்பட்டதாகவே உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தத் தொழிலாளர்களில் சுமார் 60.5 வீதம் பேர் நிரந்தர ஊழியர்களாக உள்ள நிலையில், ஏனையோர் தற்காலிக வேலைகள், சுயதொழில் அல்லது ஊதியமற்ற குடும்ப உழைப்பில் ஈடுபட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes