General17 September 2026

பொறியை உடைத்துக் கொண்டு பாய்ந்த சிறுத்தை: ரந்தெனிகல வனவிலங்கு அதிகாரிக்குக் காயம்!

பொறியில் (Wire Trap) சிக்கியிருந்த சிறுத்தையைக் காப்பாற்றச் சென்ற வனவிலங்கு மருத்துவ அதிகாரி, அந்த சிறுத்தையின் திடீர் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளார்.

ரந்தெனிகல வனவிலங்கு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரே சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளானார்.

சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்த முற்பட்ட போது, அது பொறியை உடைத்துக் கொண்டு அவர் மீது பாய்ந்து பின்னர் காட்டுக்குள் தப்பி ஓடியுள்ளது.

குறித்த சிறுத்தை பொறியில் சிக்கியிருந்தபோதும் அதற்குப் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் காயங்களுக்கு உள்ளான மருத்துவர் தெரிவித்துள்ளார்.

முழு பலத்துடன் இருந்ததால் மட்டுமே அதனால் பொறியை உடைத்துக் கொண்டு தப்பிக்க முடிந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes