General18 September 2026

திலித் ஜயவீரவின் எழுத்தாணை மனு மீதான உத்தரவு எதிர்வரும் 30 ஆம் திகதி

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை இரத்து செய்யக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு தொடர்பில், எதிர்வரும் 30ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த மனு தொடர்பான பரிசீலனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்றதையடுத்து, இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பான முறைப்பாட்டை இரத்து செய்யுமாறு கோரியே திலித் ஜயவீர இந்த எழுத்தாணை மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes