General21 September 2026

நாடு முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழை: மக்களுக்கான அவசர எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பரவலாக மழைபெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பகுதிகளில் உள்ள சில இடங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes