General23 September 2026

உயிர்த்த ஞாயிறு வழக்கு - முக்கிய புள்ளிகளிடம் விசாரணை நடத்த வலியுறுத்தல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராக தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே தொடர்பிலும் உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோன்று, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன உள்ளிட்டவர்களுக்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கத்தோலிக்க சபை கோரியுள்ளது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான அனைத்து தரப்பினரிடமும் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் இத்தகைய பாரிய குற்றச் சம்பவங்கள் இடம்பெறாத வகையில் அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes