General23 September 2026

அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவதில் விலக்கு – காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளுக்கான ஆசனப்பட்டி பயன்பாடு தொடர்பான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில தரப்பினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

இதன்படி, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், 135 சென்டிமீற்றருக்கும் குறைவான உயரம் கொண்டவர்கள் மற்றும் மருத்துவ ஆலோசனையின்படி ஆசனப்பட்டி அணிய முடியாதவர்கள் ஆகியோருக்கு இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விலக்கு அளிக்கப்பட்ட பயணிகள், சாத்தியமான சந்தர்ப்பங்களில் தகுந்த மாற்று பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பயன்படுத்துவது சிறந்தது எனப் பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, மழைக்காலங்களில் வாகனங்களைச் செலுத்தும்போது, முன்னால் செல்லும் வாகனங்களுடன் பாதுகாப்பான இடைவெளியைப் பேணுமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes