General24 September 2026

கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

கிங் கங்கையின் கரையோரத்தில் அமைந்துள்ள தவலம, நாகொட, பத்தேகம மற்றும் வெலிவிட்டிய – திவித்துர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில், அடுத்த 24 மணித்தியாலங்களில் சிறியளவிலான வெள்ள நிலை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிங் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த வெள்ள நிலை ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், குறிப்பாக கங்கை மற்றும் நீர்நிலைகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes