Sports22 August 2026

கிராண்ட் செஸ் தொடரின் இறுதிச் சுற்று: அமெரிக்காவில் ஆரம்பம்!

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிராண்ட் செஸ் தொடரின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்தப் போட்டிகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இந்தத் தொடரின் முதல் ஐந்து கட்டப் போட்டிகளின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த வீரர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தாவுக்கும் ஜெர்மனியின் வின்சென்ட் கீமருக்கும் இடையே போட்டி நடைபெறவுள்ளது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் வெஸ்லி சோ மற்றும் ஃபேபியானோ கருணா ஆகியோர் மோதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes