உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி : இயற்கை எரிவாயு விலை உயர்வு!

Wednesday, 17 June 2026 - 9:36

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%3A+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%21
உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (17) மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் மாற்றங்கள் பதிவாகியுள்ளன.

சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.70 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது.

அதேவேளை, உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.72 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதற்கிடையில், இயற்கை எரிவாயு (Natural Gas) விலையிலும் இன்று அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.247 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக சர்வதேச எரிசக்தி சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் எரிசக்தி வளங்களின் விலை மாற்றங்கள், பல நாடுகளின் எரிபொருள் இறக்குமதி செலவுகள் மற்றும் உள்நாட்டு எரிபொருள் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.