முடக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டுக்குச் சொந்தமான சொத்துக்களை விடுவிப்பதற்கான செயல்முறைகள், அந்நாட்டு மத்திய வங்கியுடன் இணைந்து நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாய் (Esmaeil Baghaei) உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரான் தனது சொத்துக்களைத் தனக்குத் தேவையானவாறு பயன்படுத்துவதற்கும், அதனைக் கையாளுவதற்கும் உள்ள 'முழுமையான உரிமையை' நிலைநாட்டும் வகையில், தற்போது நீடித்துவரும் அனைத்துத் தடைகளையும் நீக்குவதற்கு அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








