தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் வீழ்ச்சி!

Thursday, 09 July 2026 - 8:01

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%21
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (09) குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,072.38 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 74.02 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலைச் சரிவின் தாக்கம், இலங்கையின் உள்ளூர் தங்கச் சந்தையிலும் எதிரொலிக்கக்கூடும் என சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து, உலகளாவிய பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டொலரின் பெறுமதி மற்றும் முதலீட்டாளர்களின் சந்தை நகர்வுகள் ஆகியவை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மேலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.