16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை - அரசாங்கம் பரிசீலனை

Wednesday, 08 July 2026 - 11:38

16+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+-+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88
இலங்கையில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான அனுமதியை மட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று ( 8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த யோசனை தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த முயற்சியை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கமும் World Vision அமைப்பும் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.