இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின்' முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சங்கத்தின் ஆரம்பப் பொதுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் வனிந்து ஹசரங்க, சமரி அத்தபத்து உள்ளிட்ட நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் தொழில்முறை கிரிக்கெட் வீரர்களின் உரிமைகள், நலன்புரி சேவைகள் மற்றும் தொழில்முறை சார்ந்த விடயங்களில் சுதந்திரமான மற்றும் கூட்டுப் பிரதிநிதித்துவத்தை வழங்குவதையே இந்த புதிய சங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொழில்முறை கிரிக்கெட் வீரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச அமைப்பான சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்புடன் இந்த புதிய அமைப்பு இணைக்கப்படவுள்ளது.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற உலகின் முன்னணி கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் வீரர்களின் சங்கங்கள் இயங்கி வரும் நிலையில், இலங்கையிலும் இவ்வாறான அமைப்பொன்று உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.