அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் பல்வேறு காரணங்களால் இன்னும் இழுபறியிலேயே நீடிக்கின்றன.
இரு நாடுகளும் தங்களது நிலைப்பாடுகளில் பிடிவாதமாக இருப்பதால் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளுக்கான முக்கிய காரணங்கள் தொடர்பில் அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளும் தங்களது நிலைப்பாடுகளில் பிடிவாதமாக இருப்பதால் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளுக்கான முக்கிய காரணங்கள் தொடர்பில் அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
அணுசக்தி திட்டம்: ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், அத்தகைய கட்டுப்பாடுகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் என ஈரான் நிபந்தனை விதிக்கிறது.
யுரேனியம் கையிருப்பு: ஈரானிடம் உள்ள 400 கிலோ கிராம் எடையுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தனது பாதுகாப்பில் எடுத்துக்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது. இந்த கோரிக்கையை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை: ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை நீக்கப்படும் வரை, அந்த நீர்வழியில் கப்பல் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளைத் தொடரப்போவதாக ஈரான் கூறுகிறது. ஆனால், ஒப்பந்தம் ஏற்படும் வரை முற்றுகை நீங்காது என அமெரிக்கா பிடிவாதம் காட்டுகிறது.
முடக்கப்பட்ட சொத்துக்கள்: நிரந்தர ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும் என்றும், முடக்கப்பட்டுள்ள 20 பில்லியன் டொலர் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்றும் ஈரான் அதிகாரிகள் கோருகின்றனர்.
போர் இழப்பீடு: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு சுமார் 270 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
பிராந்திய செல்வாக்கு மற்றும் ஏவுகணைகள்: லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் காசாவின் ஹமாஸ் போன்ற தனது பிராந்திய நட்பு நாடுகளுக்கு ஈரான் வழங்கும் ஆதரவைக் கட்டுப்படுத்தவும், ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அமெரிக்கா முயற்சிக்கிறது.
Latest News
நிதியமைச்சின் செயலாளர் நிதிக்குழுவிற்கு வராவிடின் சட்ட நடவடிக்கை முடியும் : சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை!
Local
30 April 2026
இவன் AI மூலம் உருவாக்கப்பட்டவனா? -மீண்டும் சர்ச்சைக்குள்ளான சூரிய வன்ஷியின் துடுப்பாட்டம் - பாராட்டுக்களும் குவிந்தன
Local
30 April 2026
நிதியமைச்சின் செயலாளர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாவதற்காக நாடாளுமன்றத்திற்கு வருகை
Local
30 April 2026
உச்சத்தைத் தொட்ட மசகு எண்ணெய் விலை: ஆசிய பசிபிக் பொருளாதாரத்தில் கடும் சரிவு - அவுஸ்திரேலியா முன்னெடுக்கும் இராஜதந்திர நகர்வுகள்!
Local
30 April 2026
இலங்கையில் பெருமளவான காய்கறிகள் மற்றும் பழங்கள் வீணடிப்பு: போஷாக்கு குறைபாடு குறித்து பேராசிரியர்கள் எச்சரிக்கை
Local
30 April 2026
பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் பிளக்கும் பூமி! - துண்டு துண்டாக உடையும் நிலத்தட்டு குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்
Local
30 April 2026
21 நகரங்களில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டங்கள்
Local
30 April 2026
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை : தீர்வின்றி முடங்கிக் கிடக்கும் 6 முக்கிய சிக்கல்கள்
Local
30 April 2026
செல்லப்பிராணிகளுடன் வானூர்திப் பயணம் - பிரித்தானியாவில் வலுக்கும் புதிய சட்டத்திற்கான கோரிக்கை!
Local
30 April 2026
பாம் எண்ணெய் இறக்குமதியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய நஷ்டம்
Local
30 April 2026