2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் பிளவு குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் கடந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி, இந்த முறை மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் தோல்வி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடர் தோல்வி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வின் போது அதிமுகவில் நிலவும் விரிசல் வெளிப்படையாகத் தெரிந்தது.
இந்தநிகழ்வின்போது எடப்பாடி பழனிசாமியுடன் சுமார் ஐந்து பேர்; மட்டுமே வந்து பதவியேற்றனர்.
எஸ்.பி. வேலுமணி அணியின் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்; தனியாக வந்தனர்.
சி.வி. சண்முகம் முதலில் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்காமல் பாதியிலேயே வெளியேறினார். பின்னர் சபாநாயகர் அறையில் தனியாகப் பதவியேற்றுக் கொண்டார்.
சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இதுவரை ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
ஓ.எஸ். மணியன் தலைமையிலான ஒரு குழுவினர், எடப்பாடி பழனிசாமியைத் தலைவராக அங்கீகரிக்கக் கோரி தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர்.
அதேநேரம், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான ஒரு குழுவினர் தனியாகக் கடிதம் ஒன்றை அளித்துள்ளனர்.
சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோருக்கு ஆதரவாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிருப்தி குழுவினர் தனி அணியாகச் செயல்படப் போகிறார்களா அல்லது விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்கப் போகிறார்களா என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
தலைமை மாற்றம் கோரும் குரல்கள் வலுத்து வருவதால், எடப்பாடி பழனிசாமி இந்த எதிர்ப்பாளர்களைச் சமாதானப்படுத்துவாரா அல்லது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில்; மீண்டும் ஒரு பிளவு ஏற்படுமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கும், கொங்கு மண்டலத்தின் முக்கியத் தலைவரான எஸ்.பி. வேலுமணிக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருப்பதே இந்த அரசியல் குழப்பத்தின் மையப்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.
Latest News
'கெஹெல்பத்தர பத்மே' இன் முக்கிய துப்பாக்கிதாரி 'மாட்டியா' நள்ளிரவில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்!
Local
26 June 2026
ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்ட இந்தியாவின் உயரிய விருது!
Local
26 June 2026
ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடை - ஆப்கானிஸ்தானில் அதிரடி உத்தரவு- மீறினால் உடைத்து நொறுக்கப்படும்!
Local
26 June 2026
2025 சாதாரண தரப் பரீட்சை மறுபரிசீலனை - விண்ணப்பங்கள் தொடர்பில் பெற்றோர்கள், மாணவர்களின் கவனத்திற்கு!
Local
26 June 2026
சுகாதாரத் துறையில் பாரிய நியமனங்கள் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் விசேட அறிவிப்பு!
Local
26 June 2026
22 ஆண்டுகால நல்லவர் வேடம் கலைந்தது - கின்னஸ் புத்தகத்தில் WWE ஜாம்பவான் ஜோன் சீனா!
Local
26 June 2026
எதிர்ப்பாளர்களை எதிரிகளாகப் பார்க்கும் அரசாங்கம் - நாமல் ராஜபக்ஷ முழக்கம்!
Local
26 June 2026
வெள்ளைக் கடற்கரையில் சிக்கிய 6 மர்ம மூடைகள்
Local
25 June 2026
மட்டக்களப்பில் பராமரிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றினூடாக கடுமையான சட்ட நடவடிக்கை: மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் எச்சரிக்கை! மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிசெய்யும் நோக்குடன், பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினூடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் ஆலோசனையின் பேரிலும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழும் இந்த விசேட சுகாதாரத் திட்டங்கள் தற்பொழுது மாநகர சபை எல்லைக்குள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகர சபை எல்லைக்குள் தற்பொழுது எதிர்கொள்ளும் பிரதான சவால்களில் ஒன்றாகப் பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகள் காணப்படுகின்றன. இக்காணிகளின் உரிமையாளர்கள் அவற்றை முறையாகப் பராமரிக்காததன் காரணமாக, அயலவர்கள் மற்றும் பாதசாரிகள் இக்காணிகளுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளையும் ஏனைய குப்பைகளையும் கொட்டுவதனை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கும் பொதுச் சுகாதார சீர்கேட்டிற்கும் வழிவகுக்கின்றன. துப்புரவு செய்யப்படாமல் அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாகத் தூய்மைப்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மாநகர சபையின் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறும் மற்றும் அலட்சியம் காட்டும் காணி உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினூடாகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன், அடையாளம் காணப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் எவரும் முன்வராத பட்சத்திலோ அல்லது காணிகளைப் பராமரிக்க இணங்காத பட்சத்திலோ, அவை "மாநகர சபைக்குச் சொந்தமானது" என்ற அறிவித்தல் பலகைகள் அக்காணிகளில் நடப்பட்டு, அவை மாநகர சபையின் நேரடிப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் முதல்வர் எச்சரித்தார். பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் இவ்வேலைத்திட்டத்திற்குத் தத்தமது காணிகளைத் தூய்மையாகப் பேணி, அனைத்துக் குடிமக்களும் மாநகர சபைக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் மேலும் தெரிவித்தார்.
Local
25 June 2026
2.5 மில்லியன் டொலர் கொள்ளை: பொறுப்பில் இருந்து நழுவுகிறதா மத்திய வங்கி? நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கேள்வி!
Local
25 June 2026