நெடுந்தீவு (Delft Island) வெள்ளைக் கடற்கரை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுச் சிகரெட்டுகள், கிருமிநாசினிகள் மற்றும் வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பெருமளவிலான பொருட்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
வட கடற்படை கட்டளைத் தளத்திற்கு உட்பட்ட 'SLNS வசப' முகாமின் கடற்படை வீரர்களினால் நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்துப் பணியின் போதே இப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெள்ளைக் கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் சோதனையிட்ட போது, அங்கே கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 6 சந்தேகத்திற்கிடமான சாக்கு மூடைகளைக் கைப்பற்றி தீவிரமாகப் பரிசோதித்துள்ளனர்.
இதன்போது, அந்த மூட்டைகளில் இருந்து 500 பாக்கெட் வெளிநாட்டுச் சிகரெட்டுகள், 2,295 பாக்கெட் கிருமிநாசினிகள், 2,569 மருத்துவ களிம்புகள் , 165 அழகுசாதன கிரீம்கள் மற்றும் 64 வாசனைத் திரவிய போத்தல்கள்ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்கள் அனைத்தும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காகவும் நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
Latest News
ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்ட இந்தியாவின் உயரிய விருது!
Local
26 June 2026
ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடை - ஆப்கானிஸ்தானில் அதிரடி உத்தரவு- மீறினால் உடைத்து நொறுக்கப்படும்!
Local
26 June 2026
2025 சாதாரண தரப் பரீட்சை மறுபரிசீலனை - விண்ணப்பங்கள் தொடர்பில் பெற்றோர்கள், மாணவர்களின் கவனத்திற்கு!
Local
26 June 2026
சுகாதாரத் துறையில் பாரிய நியமனங்கள் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் விசேட அறிவிப்பு!
Local
26 June 2026
22 ஆண்டுகால நல்லவர் வேடம் கலைந்தது - கின்னஸ் புத்தகத்தில் WWE ஜாம்பவான் ஜோன் சீனா!
Local
26 June 2026
எதிர்ப்பாளர்களை எதிரிகளாகப் பார்க்கும் அரசாங்கம் - நாமல் ராஜபக்ஷ முழக்கம்!
Local
26 June 2026
வெள்ளைக் கடற்கரையில் சிக்கிய 6 மர்ம மூடைகள்
Local
25 June 2026
மட்டக்களப்பில் பராமரிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றினூடாக கடுமையான சட்ட நடவடிக்கை: மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் எச்சரிக்கை! மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிசெய்யும் நோக்குடன், பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினூடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் ஆலோசனையின் பேரிலும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழும் இந்த விசேட சுகாதாரத் திட்டங்கள் தற்பொழுது மாநகர சபை எல்லைக்குள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகர சபை எல்லைக்குள் தற்பொழுது எதிர்கொள்ளும் பிரதான சவால்களில் ஒன்றாகப் பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகள் காணப்படுகின்றன. இக்காணிகளின் உரிமையாளர்கள் அவற்றை முறையாகப் பராமரிக்காததன் காரணமாக, அயலவர்கள் மற்றும் பாதசாரிகள் இக்காணிகளுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளையும் ஏனைய குப்பைகளையும் கொட்டுவதனை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கும் பொதுச் சுகாதார சீர்கேட்டிற்கும் வழிவகுக்கின்றன. துப்புரவு செய்யப்படாமல் அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாகத் தூய்மைப்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மாநகர சபையின் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறும் மற்றும் அலட்சியம் காட்டும் காணி உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினூடாகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன், அடையாளம் காணப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் எவரும் முன்வராத பட்சத்திலோ அல்லது காணிகளைப் பராமரிக்க இணங்காத பட்சத்திலோ, அவை "மாநகர சபைக்குச் சொந்தமானது" என்ற அறிவித்தல் பலகைகள் அக்காணிகளில் நடப்பட்டு, அவை மாநகர சபையின் நேரடிப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் முதல்வர் எச்சரித்தார். பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் இவ்வேலைத்திட்டத்திற்குத் தத்தமது காணிகளைத் தூய்மையாகப் பேணி, அனைத்துக் குடிமக்களும் மாநகர சபைக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் மேலும் தெரிவித்தார்.
Local
25 June 2026
2.5 மில்லியன் டொலர் கொள்ளை: பொறுப்பில் இருந்து நழுவுகிறதா மத்திய வங்கி? நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கேள்வி!
Local
25 June 2026
எரிபொருள் விலை குறைப்பு குறித்து இப்போது கூற முடியாது.. உலக சந்தையில் விலை குறையும் போது மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் - வலுசக்தி அமைச்சர்
Local
25 June 2026