General07 June 2026

மழையால் கைவிடப்பட்ட 2ஆவது ஒருநாள் போட்டி!

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

ஜமைக்காவில் நடைபெறவிருந்த குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இருப்பினும் இடைவிடாது பெய்த மழை காரணமாக குறித்த போட்டி கைவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1 - 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes