கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று காலை சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் தற்காலிக கூடாரத்தை காவல்துறை அகற்றியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மனிதாபிமானமற்ற மற்றும் அநீதியான நடவடிக்கைகளைக் கண்டித்து இந்த சத்யாகிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதிகள் பலரும் இன்றைய தினம் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தை காவல்துறை அகற்ற முற்பட்டது.
இதனையடுத்து, இருதரப்புக்கும் இடையே இந்த தள்ளுமுள்ளு மற்றும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும், இறுதியில் அந்த தற்காலிக கூடாரம் காவல்துறையினரால் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.
பின்னர், போராட்டக்காரர்கள் கூடாரத்தை அமைப்பதற்கு பாரிய பிரயத்தனங்கள் மேற்கொண்டிருந்த போதிலும், அந்த முயற்சிகளும் காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், தற்போது, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News
நாளை இரவு முதல் 19 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் முற்றாகத் தடை!
Local
15 June 2026
விமல், கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்டோருக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை
Local
15 June 2026
சுரேஷ் சலேவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை; விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
15 June 2026
மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
15 June 2026
பந்து வீசும் முன்பே இலங்கை கணக்கில் 10 ஓட்டங்கள்: நடுவர்கள் எடுத்த அதிரடி முடிவு
Local
15 June 2026
யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!
Local
15 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு வெளியாகும் திகதி அறிவிப்பு!
Local
15 June 2026
இலங்கையின் பொருளாதாரம் வலுவான வளர்ச்சி : முதல் காலாண்டில் 5.1% உயர்வு!
Local
15 June 2026
அஜித்தை பாராட்டிய விஜய் : குடும்பத்துடன் கொண்டாடிய ஷாலினி!
Local
15 June 2026
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கான 'LankaKonect' செயலி நாளை அறிமுகம்
Local
15 June 2026