பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என உத்தரவிடுமாறு கோரி யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த சீராய்வு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அமல் ரணராஜா மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
யோஷித ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ், இந்த வழக்கில் தனது சேவைப்பெறுநருடன் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த டெய்ஸி ஃபோரஸ்ட் என்ற பெண் சட்டமா அதிபரினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நிலைமை அவ்வாறிருக்க, தனது சேவைபெறுநருக்கு எதிராக மாத்திரம் "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டை முன்னெடுத்துச் செல்வது சட்டத்துக்கு முரணானது என அவர் வாதிட்டார்.
எனினும், ஒரு பிரதிவாதிக்கு எதிராக மட்டுமேயாயினும் "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சட்டப்பூர்வ சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு, இந்த சட்ட நிலைமை குறித்து நாளை முழுமையான விசாரணையை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் தீர்மானித்துள்ளது.

Latest News
நாளை இரவு முதல் 19 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் முற்றாகத் தடை!
Local
15 June 2026
விமல், கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்டோருக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை
Local
15 June 2026
சுரேஷ் சலேவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை; விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
15 June 2026
மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
15 June 2026
பந்து வீசும் முன்பே இலங்கை கணக்கில் 10 ஓட்டங்கள்: நடுவர்கள் எடுத்த அதிரடி முடிவு
Local
15 June 2026
யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!
Local
15 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு வெளியாகும் திகதி அறிவிப்பு!
Local
15 June 2026
இலங்கையின் பொருளாதாரம் வலுவான வளர்ச்சி : முதல் காலாண்டில் 5.1% உயர்வு!
Local
15 June 2026
அஜித்தை பாராட்டிய விஜய் : குடும்பத்துடன் கொண்டாடிய ஷாலினி!
Local
15 June 2026
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கான 'LankaKonect' செயலி நாளை அறிமுகம்
Local
15 June 2026