பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், "இயக்குநர் இமயம்" என்று அழைக்கப்படுபவருமான பாரதிராஜாவின் மறைவையொட்டி, நடிகர் மற்றும் இயக்குநரான ராகவா லோரன்ஸ் தனது வாழ்க்கையின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தனது வாழ்க்கையின் முக்கிய முடிவொன்றை வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிப்பதாக முன்னதாகத் தெரிவித்திருந்ததை நினைவூட்டியுள்ளார்.
எனினும், தற்போதைய பாரதிராஜாவின் மறைவுச் செய்தி ஒட்டுமொத்தத் திரைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், இந்த இழப்பு தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்தது போன்ற தனிப்பட்டதொரு சோகமாகத் தனக்கு உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், பாரதிராஜாவின் மீதான மதிப்பு மற்றும் சினிமாத்துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளுக்கு மரியாதை செலுத்தும் முகமாக, தனது அறிவிப்பை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இந்த முக்கிய அறிவிப்பானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு வெளியிடப்படும் என அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் மகளிர் அணி
Local
10 June 2026
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவுக்கு விளக்கமறியல்
Local
10 June 2026
இந்த ஆண்டு இறுதிக்குள் 31,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை
Local
10 June 2026
சுரேஷ் சலேவுக்கு ஆதரவான சத்தியாக்கிரகப் போராட்டம் கைவிடப்பட்டது
Local
10 June 2026
சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டாரா? ஆராய ஐவர் கொண்ட விசேட சட்டமருத்துவ குழு நியமனம்
Local
10 June 2026
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு: தனது முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லோரன்ஸ்
Local
10 June 2026
கோட்டாபயவுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதிலிருந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத சுரேஷ் சலே!
Local
10 June 2026
பாரதிராஜாவின் வரலாற்றுச் சம்பவம் : இலங்கைத் தமிழர் விவகாரத்திற்காக பத்மஸ்ரீ விருதைத் துறந்த இயக்குநர் இமயம்!
Local
10 June 2026
சந்தையில் மீன்களின் விலை அதிகரிப்பு
Local
10 June 2026
ராப் பாடகர் சங்கீத்சன் கைது: கனடா முதல்வர் கண்டனம்
Local
10 June 2026