டிஜிட்டல் அடையாள அட்டைகளை பதிவு செய்தல் என்ற பெயரில் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடிகள் இடம்பெற்று வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக திணைக்களம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில்,
ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அவசர அழைப்பு இலக்கத்தை ஒத்த தொலைபேசி எண்கள் மூலம் மோசடி செய்பவர்கள் பொதுமக்களைத் தொடர்பு கொள்கின்றனர்.
குறிப்பாக +94 11 5226126, 011 5226126, 0771167739 மற்றும் 0742756098 ஆகிய எண்களைப் பயன்படுத்தி, திணைக்கள அதிகாரிகள் எனப் போலியாகக் கூறி தகவல்களைத் திரட்டுகின்றனர்.
இந்த மோசடியின் பின்னணியில் உள்ளவர்கள் அரச இலச்சினையை தவறாகப் பயன்படுத்தி ஒரு கைபேசி செயலியை உருவாக்கியுள்ளனர்.
டிஜிட்டல் அடையாள அட்டைப் பதிவுக்குத் தேவை எனக் கூறி, இந்தச் செயலி மூலம் மக்களின் தனிப்பட்ட விபரங்களைக் கோரி வருகின்றனர்.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள “https://drpgov-lk[.]com” என்ற போலி இணையதள முகவரியூடாக எவ்வித தனிப்பட்ட தகவல்களையும் வழங்க வேண்டாம் எனத் திணைக்களம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது டிஜிட்டல் அடையாள அட்டைகளுக்கான எந்தவொரு பதிவு நடவடிக்கைகளும் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவில்லை என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Latest News
‘எந்தவொரு அழுத்தத்துக்கும் அச்சுறுத்தலுக்கும் எதிராக உறுதியுடன் நிற்போம்’: ஈரான் ஜனாதிபதி!
Local
11 June 2026
காலிமுகத்திடல் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர் உயிரிழப்பு
Local
10 June 2026
‘மிகக் கடுமையான தாக்குதல் நடத்துவோம்’: ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
Local
10 June 2026
டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி - ஆட்பதிவுத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
10 June 2026
அதிகரிக்கும் டெங்கு அச்சுறுத்தல் - இரு நாட்களில் 4,000 நுளம்புப் பெருக்க இடங்கள் அடையாளம்
Local
10 June 2026
கடந்த 6 ஆண்டுகளில் 2 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து விலகல் - நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்!
Local
10 June 2026
காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவ உலங்கு வானூர்தி விபத்து - பயணித்த அனைத்து இராணுவப்படை உறுப்பினர்களும் உயிரிழப்பு
Local
10 June 2026
உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரு பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை: முகாமையாளர் மற்றும் 12 பெண்கள் கைது
Local
10 June 2026
பதுளை கிளன் அல்பின் தோட்டத்தில் தீப்பரவல் - இரு வீடுகள் முழுமையாகச் சேதம்
Local
10 June 2026
முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
Local
10 June 2026