International12 June 2026

1.8 ட்ரில்லியன் டொலர் மதிப்புடன் பங்குச்சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்!

அமெரிக்காவின் பிரபல விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), பொது வர்த்தக நிறுவனமாக மாறுவதற்கு முன்னதாக நிதி நிறுவனங்களிடமிருந்து 75 பில்லியன் டொலர் நிதியைத் திரட்டியுள்ளது.

இதன் மூலம், வரலாற்றிலேயே மிக அதிக மதிப்புடைய பங்குச்சந்தை பட்டியலிடலாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் (SEC) சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, ஒரு பங்கின் விலை 135 டொலராக நிர்ணயிக்கப்பட்டு பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப சந்தை மதிப்பு சுமார் 1.8 ட்ரில்லியன் டொலரை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டியலிடலின் ஊடாக, உலகின் பெரும் பணக்காரரான ஈலோன் மஸ்க், உலகின் முதலாவது 'ட்ரில்லியனர்' (Trillionaire) என்ற அந்தஸ்தைப் பெறவுள்ளார்.

நிறுவனம் பொது வர்த்தகத்திற்கு வந்தாலும், ஈலோன் மஸ்க் 84% க்கும் அதிகமான வாக்குரிமையுடன் (Voting power) நிறுவனத்தின் முழுமையான கட்டுப்பாட்டைத் தன்வசம் வைத்திருப்பார்.

இந்த அதீத அதிகாரம் காரணமாக, மஸ்க்கின் ஏனைய நிறுவனங்களை ஸ்பேஸ் எக்ஸ் கையகப்படுத்துவது போன்ற முடிவுகளை அவரே தனித்து எடுக்க முடியும் என பிபிசி செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes