நியூசிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான கேன் வில்லியம்சன் (Kane Williamson), சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அவரது 16 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை நிறைவுக்கு வந்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து வகையான போட்டி வடிவங்களிலும் (Tests, ODIs, T20Is) அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற பெருமையுடன் கேன் வில்லியம்சன் சர்வதேச அரங்கிலிருந்து விடைபெறுகிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், "சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் சில காலமாகச் சிந்தித்து வந்தேன். தற்போது அதற்கான சரியான நேரம் இதுவென்பது தெளிவாகத் தெரிகிறது. நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் எனது முழு பங்களிப்பையும் வழங்கியுள்ளேன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது சொந்த விருப்பத்தின் பேரில் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிக்கொள்வதை இலாபகரமாகக் கருதுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், நியூசிலாந்து அணிக்காக 378 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 48 சதங்கள் மற்றும் 6 இரட்டைச் சதங்கள் அடங்கலாக 19,346 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இவரது தலைமையில் நியூசிலாந்து அணி இரண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றதுடன், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் கிண்ணத்தையும் வென்று சாதனை படைத்திருந்தது.
நியூசிலாந்து கிரிக்கெட்டின் பொற்கால நாயகனாகக் கருதப்படும் கேன் வில்லியம்சனின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களைப் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Latest News
மகளிர் டி20 உலகக் கிண்ணம்: இங்கிலாந்துக்கு எதிரான ஆரம்பப் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு
Local
12 June 2026
பொசன் தினத்தில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய உந்துருளிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை
Local
12 June 2026
இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் களம் இறங்கும் விராட் கோலி
Local
12 June 2026
நான் அரசியலுக்கு வருகிறேன் - நடிகர் ராகவா லோரன்ஸ் அதிரடி அறிவிப்பு!
Local
12 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 341.36 ரூபாவாகப் பதிவு!
Local
12 June 2026
நாவலபிட்டி பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்து விபத்து - நால்வர் மருத்துவமனையில் அனுமதி
Local
12 June 2026
100 தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு நியமனம்
Local
12 June 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு பிணை!
Local
12 June 2026
5 கோடி ரூபாய் பெறுமதியான ஹஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
Local
12 June 2026
சிட்னி நோக்கிப் புறப்பட்ட வானூர்தி கட்டுநாயக்கவில் தரையிறக்கம் - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கை!
Local
12 June 2026