General12 June 2026

சிட்னி நோக்கிப் புறப்பட்ட வானூர்தி கட்டுநாயக்கவில் தரையிறக்கம் - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் எயார்லைன்சுக்குச் சொந்தமான UL-606 வானூர்தி,புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு (BIA) திருப்பியனுப்பப்பட்ட சம்பவம் குறித்து அந்த நிறுவனம் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், குறித்த வானூர்தியின் எஞ்சின்களில் ஒன்றில் மின்னல் தாக்கியதாகவும், அதன் காரணமாகவே வானூர்தி அவசரமாக கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வானூர்தியில் இருந்த 207 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் மாற்று வானூர்தி ஒன்றின் மூலம் இன்று அதிகாலை 05:51 மணியளவில் சிட்னி நோக்கி அனுப்பி வைக்கப்பட்டதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கே தாங்கள் எப்போதும் முதலிடம் வழங்குவதாகவும், தங்களது வானூர்தி சேவைகளில் உயர்தர பாதுகாப்புத் தரநிலைகளைப் பேணுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes