International13 June 2026

சட்டவிரோத குடியேற்றப் பதற்றத்தைத் தணிக்க இந்தியா - பங்களாதேஷ் கூட்டு நடவடிக்கை

இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையே நிலவி வரும் பரஸ்பரம் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான பதற்ற நிலையை தீர்ப்பதற்கு உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வது மற்றும் ஒருங்கிணைந்த கண்காணிப்புப் பணிகளை பொது எல்லையில் மேற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இரு நாடுகளினாலும், இணைந்து கூட்டறிக்கை ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆவணமற்ற குடியேறிகளைக் இனங்கண்டு நாடு கடத்தும் இந்தியாவின் செயல்பாடு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் சிக்கல் நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், புதுடில்லியில் நடைபெற்ற நான்கு நாள் உயர்மட்ட எல்லை அதிகாரிகளின் கூட்டத்தின் இறுதியில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷும் இந்தியாவும் நான்காயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.
இது உலகின் மிக நீளமான எல்லைகளில் ஒன்றாக ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes