General18 June 2026

தேயிலை வடிகட்டும் தாள்கள் எனக்கூறி பல கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் கடத்தல்: சுங்கப் பிரிவினர் முற்றுகை

தேயிலை வடிகட்டும் தாள்களை இறக்குமதி செய்வதாக போலி ஆவணங்களைத் தயாரித்து, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய கடத்தல் கொள்கலன் ஒன்றை சுங்க அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

குறித்த கொள்கலனை சோதனையிட்ட போது, அதில் தேயிலை வடிகட்டும் தாள்கள் எதுவும் இருக்கவில்லை எனவும், அதற்குப் பதிலாக சந்தையில் அதிக நன்மதிப்பைக் கொண்ட பெருமளவிலான பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அவற்றில், சட்டவிரோத சிகரெட்டுகள் அடங்கிய 100 பெரிய அட்டைப்பெட்டிகள்

நாட்டுக்குள் இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சுமார் 11 மெட்ரிக் டொன் உலர்ந்த மஞ்சள்

இலத்திரனியல் சிகரெட்டுகள் மற்றும் புகையிலைக் கலவைகள்

1600 கிலோகிராம் முந்திரிப்பருப்பு

500 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள், வெளிநாட்டு சொக்லேட்டுகள் மற்றும் பிஸ்கட் வகைகள் ஆகியவை காணப்பட்டதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் குறித்து சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes