உலகளவில் பரவி வரும் H5N1 ரகப் பறவைக் காய்ச்சல் காரணமாக, அவுஸ்திரேலியாவிற்குச் சொந்தமான தொலைதூர அண்டார்டிக் தீவுகளில் (Heard Island) பல்லாயிரக்கணக்கான தென் கடல் யானை (Southern elephant seal) குட்டிகள் உயிரிழந்துள்ளதாகப் புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதத் தரவுகளின்படி, ஹேர்ட் தீவிலிருந்த 17,364 சீல் குட்டிகளில் 13,359 குட்டிகள், கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் பறவைக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளன.
சில குறிப்பிட்ட பகுதிகளில் 97 வீதமான குட்டிகள் உயிரிழந்துள்ளதுடன், கிங் (King) மற்றும் ஜென்டூ (Gentoo) பெங்குவின் தொகையிலும் வழக்கத்திற்கு மாறான இறப்புகள் பதிவாகியுள்ளன.
அவுஸ்திரேலிய பிரதான நிலப்பரப்பில் இதுவரை H5N1 தொற்று பதிவாகாத பின்னணியில், அதன் வெளிவாரிப் பிராந்தியத் தீவொன்றில் இத்தொற்று கண்டறியப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
1,800 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பிரான்சுக்குச் சொந்தமான குரோசெட் தீவுகளில் இருந்து இடம்பெயர்ந்த பறவைகள் மூலமாகவே இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த நிலைமை கவலைக்குரியது எனத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய சுற்றாடல் அமைச்சர் முர்ரே வாட், அவுஸ்திரேலிய பிரதான நிலப்பரப்பிற்கும் இந்தத் தொற்று பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கையாக இருந்து திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Latest News
இயற்கை அனர்த்த பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்புறுதித் திட்டம்
Local
18 June 2026
மக்களை உலுக்கிய கொடூரம் : தீய ஆவியை விரட்ட மயானத்தில் புதைகுழிகளைத் தோண்டிய பேயோட்டும் குழுவினர்!
Local
18 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - கைதுக்கு எதிரான கோட்டாபயவின் மனு ஒத்திவைப்பு
Local
18 June 2026
சூர்யவன்ஷி மீது நடவடிக்கையா? பிசிசிஐ விளக்கம்
Local
18 June 2026
வீசி எறிந்த மீன்களுக்குள் இருந்த ரகசியம் : கேரளக் கடலில் சிக்கிய புதிய வகை சுறா - விஞ்ஞானிகள் சாதனை!
Local
18 June 2026
மொஸ்கோ மீது யுக்ரைன் தாக்குதல்: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இலக்கு, வானூர்தி நிலையங்கள் முடக்கம்
Local
18 June 2026
பறவைக் காய்ச்சலின் தாக்கம்: அவுஸ்திரேலிய அண்டார்டிக் தீவுகளில் 13,000 க்கும் மேற்பட்ட சீல் குட்டிகள் உயிரிழப்பு
Local
18 June 2026
சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்தது ஐக்கிய அரபு இராச்சியம்
Local
18 June 2026
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதானவரின் 16 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்
Local
18 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை - அமெரிக்க நீதித்துறை வசம் உள்ள சான்றுகளை அரசாங்கம் கோரியுள்ளதா?
Local
18 June 2026