International18 June 2026

உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி : இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு!

உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகளில் இன்று (18) கணிசமான மாற்றங்கள் பதிவாகியுள்ளன.

சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, அமெரிக்காவின் WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.16 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேவேளை, சர்வதேச ரீதியில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக அதிகம் பயன்படுத்தப்படும் பிரதான சுட்டியான பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 78.07 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

மசகு எண்ணெய்யின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும், உலகளாவிய சந்தையில் இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையில் இன்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, இயற்கை எரிவாயுவின் விலை 3.152 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes