இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக விரிவான கணினி வலையமைப்பு திட்டமொன்றை நிறுவுவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கே இந்த அனுமதி கிடைத்துள்ளது.
இலங்கை பரீட்சைத் திணைக்களம் தேசிய பரீட்சைகள் உட்பட வருடத்திற்கு 300க்கும் மேற்பட்ட பரீட்சைகளை நடாத்துகின்றது. எனினும், திணைக்களத்தின் தொழில்நுட்பப் பணிகள் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியான கணினி அமைப்புகளாகக் காணப்படுவதால், பரீட்சை செயல்பாடுகளில் பெரும்பாலான அத்தியாவசியப் பணிகள் மனித வளத்தைக் கொண்டே மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அத்துடன், தரவுகள் மற்றும் பதிவேடுகள் பொதிகளாகப் பிரிவுகளுக்கு இடையே மாற்றப்படுவதால், பரீட்சை முடிவுகள் தாமதமடைதல், தவறுகள் ஏற்படுதல், பொதிகள் மற்றும் மனித வளங்கள் வீணடிக்கப்படுதல் போன்ற குறைபாடுகள் இனங்காணப்பட்டுள்ளன.
தற்போது அரச துறையில் டிஜிட்டல் மயமாக்கல் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பரீட்சைத் திணைக்களத்தின் கணினி வலையமைப்பு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமானது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய, பரீட்சைத் திணைக்களத்தின் பணிகளை மிகவும் துரிதமாகவும், துல்லியமாகவும், திறமையாகவும் மாற்றுவதற்காக இந்த நவீன கணினிமயமாக்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
Latest News
சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணையவழியில் மாத்திரம் பெற்றுக்கொள்ளமுடியும்
Local
24 June 2026
தேர்தலில் 'அழியாத மை' நடைமுறையை நீக்குவதன் மூலம் 100 மில்லியன் சேமிப்பு!
Local
24 June 2026
சாவகச்சேரி உப தவிசாளர் கிஷோர் நீக்கப்பட்டமை அதிகார துஷ்பிரயோகம் - நாமல் குற்றச்சாட்டு
Local
24 June 2026
வேதனம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
Local
24 June 2026
வைபவ் சூர்யவன்ஷிக்கு இங்கிலாந்தில் வழங்கப்படப்போகும் விசேட வசதி
Local
24 June 2026
புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு - பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
Local
24 June 2026
"ராஜபக்சக்களின் கனவு நகரமும், சஜித்தின் பெட்டி வீடுகளுமே ஹம்பாந்தோட்டை யானை அச்சுறுத்தலுக்குக் காரணம்!"
Local
24 June 2026
எல் நினோ, லா நினா பாரிய பேரழிவாக மாறுவதற்கு முன்னர் அதனைத் தடுப்பதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
Local
24 June 2026
"க்ளீன் ஸ்ரீலங்கா என்று கூறிவிட்டு கொழும்பில் நடக்கக்கூட முடியாத அளவுக்குத் துர்நாற்றம்!"
Local
24 June 2026
பொசன் காலப்பகுதியில் மாற்றியமைக்கப்பட்ட உந்துருளிகளுக்கு தடை - காவல்துறை விசேட எச்சரிக்கை!
Local
24 June 2026