அமெரிக்க செனட் சபை, தேவையற்ற மற்றும் அர்த்தமற்ற போர் அதிகாரச் சட்ட வாக்கெடுப்பை நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வீழ்ச்சியடையப் போகும் ஈரான் தமக்கு எதையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக டொனல்ட் ட்ரம்ப் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பல தசாப்தங்களுக்குப் பின்னர், முதன்முறையாக அமெரிக்காவையும், அதன் ஜனாதிபதியான தன்னையும் ஈரான் மதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பயங்கரவாதத்திற்கு முதன்மை ஆதரவு வழங்கும் நாட்டுக்கு, தான் எதிராகச் செயற்பட்டமையை அமெரிக்கா விரும்பவில்லை எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதனாலேயே, அர்த்தமற்ற 'போர் அதிகாரச் சட்ட' வாக்கெடுப்பை செனட் சபை நடத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம், செனட்டர்கள் எதிரிக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்கியுள்ளதாக ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈரான் தொடர்பான போர் அதிகாரங்கள் குறித்த செனட் சபையின் வாக்கெடுப்பு தனது பணியை கடினமாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இலக்குகளை அடைவது உறுதி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Latest News
மெட்டாவின் புதிய AI ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம் : விலை எவ்வளவு தெரியுமா?
Local
24 June 2026
காணாமல் போன 19 வயது யுவதியை தேடுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
Local
24 June 2026
சொத்து மற்றும் வாகன விற்பனை: புதிய வரிச் சலுகை குறித்த முக்கிய அறிவிப்பு!
Local
24 June 2026
கனிம அகழ்வுக்கு அள்ளி வழங்கப்படும் ஆராய்ச்சி உரிமங்கள்
Local
24 June 2026
அமெரிக்க செனட் சபையின் வாக்கெடுப்பு அர்த்தமற்றது : ட்ரம்ப் குற்றச்சாட்டு!
Local
24 June 2026
பொசன் தானசாலைகளுக்கு காவல்துறை அனுமதி கட்டாயம்! வீதி விபத்துகளை மறைத்தால் சாரதிகளுக்கு சிறை!
Local
24 June 2026
அரச வாகன முறைகேடு: விமல் வீரவன்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் விளக்கமறியலில்
Local
24 June 2026
16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை? நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம்!
Local
24 June 2026
தெல்தெனிய பெண் மரணம் - காதலனுக்கு உதவிய மற்றுமொரு நபர் கைது
Local
24 June 2026
தென்னங்கன்றுகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்
Local
24 June 2026