General25 June 2026

கைதான ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - சஜித் தெரிவிப்பு

கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (25) கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் வசந்த குமார அபேசிங்கவிற்கு எதிராகக் கட்சி மட்டத்தில் முறையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வின் போது ஆளும்தரப்பினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில்,

"நாங்கள் நிச்சயமாக இது தொடர்பாக முறையான ஒழுக்காற்று விசாரணையை நடாத்தி, தேவைப்படின் எடுக்கக்கூடிய மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். தவறிழைப்பவர்களுக்கோ அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கோ எமது கட்சியில் இடமில்லை. முறையான விசாரணையின் மூலமே நாம் இறுதி முடிவை எட்டுவோம்."எனத் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes