கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பதவிக்கால நீடிப்பை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை (திங்கட்கிழமை) முடிவடையவிருந்த நிலையில், விசாரணைகளை நிறைவு செய்து இறுதி அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக இந்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபைக்குள் நடைபெற்ற ஊழல், மோசடி, நம்பிக்கை துரோகம் மற்றும் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் பொறுப்பு இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, கணக்காளர் ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏக்கநாயக்க மற்றும் காவல்துறையின் முன்னாள் சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் டி.எஸ். விக்ரமசிங்க ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.
Latest News
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை: அமைச்சரவை ஆராய்கிறது!
Local
28 June 2026
பஹ்ரைன் மற்றும் குவைத் மீதான தாக்குதல்களுக்கு லெபனான் ஜனாதிபதி கண்டனம்
Local
28 June 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்; பெண் உட்பட ஐவர் கைது
Local
28 June 2026
யூடியூப் (YouTube) காணொளிகளைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றதால் ஏற்பட்ட உயிரிழப்பு
Local
28 June 2026
பிரான்சில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழப்பு!
Local
28 June 2026
கொழும்பு மாநகர சபை விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு
Local
28 June 2026
அமைச்சர் வசந்த சமரசிங்கவின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு
Local
28 June 2026
டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த புகை விசிறல் பயனுள்ள தீர்வு அல்ல -நிபுணர்கள் தெரிவிப்பு!
Local
28 June 2026
சவூதி அரேபியாவில் வானூர்தி விபத்து: 14 பேர் பலி!
Local
28 June 2026
ஜப்பானின் வடகிழக்கில் 6.1 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அழிப்பேரலை அபாயமில்லை
Local
28 June 2026