General29 June 2026

அழுத்தங்களுக்குப் பணியாத ஈரான் - உலகக்கிண்ண கால்பந்து அணியின் பயணம்

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் ஈரானிய அணியின் பயணம் முடிவுக்கு வந்த நிலையில், அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஈரானின் வெளிவிவகார அமைச்சு கருத்து தெரிவித்துள்ளது.

"மனிதநேயமற்ற மற்றும் முன்னோடியில்லாத அழுத்தங்களுக்கு மத்தியிலும் ஈரானிய அணி உறுதியுடன் செயல்பட்டது. தடைகளும் அழுத்தங்களும் அவர்களைப் பணிய வைக்கவில்லை" என்று வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி (Esmaeil Baghaei) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றமான சூழல் காரணமாக, ஈரானிய அணி தனது போட்டிகளுக்காகத் தொடர்ச்சியாக மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய வேண்டியிருந்தது.

அமெரிக்க அதிகாரிகள், ஈரான் அணி போட்டிகள் தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்குள் மட்டுமே நாட்டிற்குள் நுழையவும், போட்டி முடிந்த அன்றே வெளியேறவும் வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகளை விதித்தனர்.

அணியினரை அமெரிக்க அரசு நடத்திய விதம் "மிகவும் மோசமானது" என்று ஈரானிய பயிற்சியாளர் அமீர் கலனோயி (Amir Ghalenoei) கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஒஸ்திரியா-அல்ஜீரியா இடையிலான போட்டிக்குப் பிறகு, ஈரான் அணி முதல்முறையாக knockout சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes