எரிபொருள் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருள் வகைகளின் விலையைக் குறைத்து திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 414 ரூபாவாகவும், லங்கா ஒட்டோ டீசலின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 382 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் பொதுமக்கள் தமது அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.
தற்போதைய வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடுகையில் இந்த விலை குறைப்பு முற்றிலும் போதுமானதாக இல்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
"கடந்த வெசாக் பண்டிகையின் போது எரிபொருளுக்கான விலையை அதிகரித்து, இந்த பொசன் பண்டிகைக்கு 20 ரூபாய் குறைத்து அரசாங்கம் 'தானம்' வழங்குகிறதா?, கடையில் ஒரு தேநீர் குடிக்கவோ அல்லது ஒரு மிட்டாய் வாங்கவோ கூட இந்த 20 ரூபாய் போதாது. குறைந்தது 100 ரூபாவாவது குறைத்திருக்க வேண்டும்."
"நாட்டில் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. ஆனால் மக்களுக்கான வேதனம்; இன்னும் அதிகரிக்கப்படவில்லை. 100 ரூபாய் விலையை ஏற்றிவிட்டு, 20 ரூபாய் குறைப்பதில் எந்த பயனும் இல்லை. அடுத்த மாதமேனும் விலையை மேலும் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மக்கள் கூறியுள்ளனர்.
இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்த வாகன சாரதிகள்,
"எரிபொருள் விலை குறைப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த சிறிய தொகை எவ்விதத்திலும் பொருளாதார சுமையைக் குறைக்கப் போவதில்லை. பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்" என சுட்டிக்காட்டினர்.
Latest News
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றமில்லை
Local
30 June 2026
கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய்
Local
30 June 2026
அரச அதிகாரிகளுக்கு விசேட அறிவிப்பு : சொத்து, பொறுப்பு அறிக்கை சமர்ப்பிக்க புதிய கால அவகாசம்!
Local
30 June 2026
"இவர்களுக்கு அடிப்படை கூட புரியவில்லை.. இந்த அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை!"
Local
30 June 2026
இந்திய அணி தேர்வில் சர்ச்சை! சூர்யவன்ஷி புறக்கணிப்பு குறித்து கொந்தளித்த முகமது கைஃப்
Local
30 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை வீழ்ச்சி : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
30 June 2026
அரச ஊழியர்கள் 20 கிலோ அரிசியைக் கூட கடனுக்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் - அரசாங்கம் மீது சாடல்
Local
30 June 2026
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூரத் தாக்குதல் : 12 பேர் உயிரிழப்பு - 40க்கும் மேற்பட்டோர் காயம்!
Local
30 June 2026
"எரிபொருள் விலை குறைந்தாலும் மண்ணெண்ணெய் விலை குறையவில்லை!" - தமக்குரிய மானியம் யாருடைய பைகளுக்கு சென்றது என கடற்றொழிலாளர்கள் கேள்வி
Local
30 June 2026
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!
Local
30 June 2026