International12 July 2026

ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடிப் பதிலடித் தாக்குதல் : இந்த வாரத்தில் மூன்றாவது முறை!

ஹோர்முஸ் நீரிணையில் சைப்ரஸ் கொடியுடன் பயணித்த, MV GFS Galaxy என்ற கப்பல் மீது, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த வாரத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்கப் படைகள், ஈரான் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் நடவடிக்கை, சர்வதேச கடற்போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பதிலடி நடவடிக்கை என, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Related recommendation
Hiru TV News | Programmes