Sports14 July 2026

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறாரா ராகுல் டிராவிட்?

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் முன்னாள் வீரரருமான ராகுல் டிராவிட், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான பரிசீலனையில் உள்ளதாகத் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB), மெக்கல்லமுக்கு அடுத்தபடியாகப் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதில் ராகுல் டிராவிட்டின் பெயர் தீவிரமாகப் பரிசீலிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தப் பயிற்சியாளர் போட்டியில் ஆண்டி பிளவர், ரிச்சர்ட் டாசன், குமார் சங்ககாரா, ஆண்ட்ரூ பிளின்டாப் மற்றும் ஜஸ்டின் லாங்கர் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஏஷஸ்‌ கிண்ணத் தொடரைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து கிரிக்கெட் சபை விரைவில் பயிற்சியாளர் குறித்த இறுதி முடிவை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes