International12 July 2026

ஓமான் கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்: இந்திய வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம்

ஓமான் கடற்கரை அருகே 'ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி' (GFS Galaxy) வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சைப்ரஸ் கொடி ஏந்திச் சென்ற இந்த வணிகக் கப்பல், ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் பயணித்தபோது ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் (IRGC) தாக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலால் கப்பலின் இயந்திரம் அறை கடுமையாகச் சேதமடைந்து, கப்பலில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தக் கப்பல் தனது பயணத்தைத் தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளது.

கப்பலில் பணியாற்றிய 11 இந்தியர்களில் 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக ஓமானில் உள்ள இந்திய தூதரகம், அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தீவிர மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மீட்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஓமான் அரசுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஈரான் தொடர்புடைய 140 ராணுவ நிலைகளை இலக்கு வைத்து அமெரிக்காவின் சென்ட்காம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes