International14 July 2026

இயர்போன் (Earphone) இன்றி ஒலி எழுப்பினால் ரூ.2,500 அபராதம்!

சென்னை மெட்ரோ தொடருந்துகள் மற்றும் தொடருந்து நிலையங்களில், இயர்போன் (Earphone) பயன்படுத்தாமல் தொலைபேசியில் பாடல் கேட்பது அல்லது காணொளிகளைப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகளுக்கு ரூ.2,500 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ தொடருந்து நிர்வாகம் (CMRL) அறிவித்துள்ளது.

பிற பயணிகளுக்குத் தொந்தரவு ஏற்படாத வகையில், ஒலி அல்லது காணொளிகளைக் கேட்க விரும்பும் பயணிகள் கண்டிப்பாக இயர்போனைப் பயன்படுத்த வேண்டும் என்று நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes