International18 July 2026

மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ், தனது 89-வது வயதில் காலமானார்.

கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த அனைத்துத் துறை ஆட்டக்காரராக கருதப்பட்ட அவர், 1968-ல் முதல் தரப் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் ஆவார்.

1954-1974 வரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,032 ஓட்டங்களையும், 235 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றினார்.

1958-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 365 ஓட்டங்கள் எடுத்தது அவரது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

கிரிக்கெட்டில் ஆற்றிய சேவைக்காக, 1975-ல் பிரித்தானிய அரசால் வழங்கப்படும் உயரிய கௌரவமான 'நைட்' பட்டத்தைப் பெற்றார். இந்த கௌரவங்களை பெறுபவர்களே தமது பெயருக்கு முன்னால் “சேர்” என்ற பட்டத்தை பயன்படுத்துகின்றனர்

விஸ்டனின் 20-ஆம் நூற்றாண்டின் ஐந்து சிறந்த கிரிக்கெட் வீரர்களில் அவரும் ஒருவர்.

நொட்டிங்ஹாம்ஷயர் (Nottinghamshire) கழகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் பிரபலங்கள் சோபர்ஸின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.
 
Related recommendation
Hiru TV News | Programmes