International22 July 2026

வெப்பத்தை வெறும் 5 நிமிடத்தில் விரட்டும் புதிய சாதனம் : மனிதர்களைக் குளிர்விக்க ஒரு மனித குளிரூட்டி!

ஜப்பானில் அதிகரித்து வரும் கடும் வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், 'Do Hiemon Box' எனப்படும் மனித குளிரூட்டி (Human Fridge) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்கூட்டியே குளிரூட்டப்பட்ட இந்த சாதனத்திற்குள் அமர்ந்தால், வெறும் 5 நிமிடங்களில் தலை, கழுத்து, தோள்பட்டைகள் மற்றும் முதுகுப் பகுதி உள்ளிட்ட முக்கிய உடல் பகுதிகளுக்கு குளிர்ந்த காற்றைச் செலுத்தி உடல் வெப்பத்தை விரைவாகக் குறைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பத்தில் நீண்ட நேரம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வெப்ப அழுத்தத்தை (Heat Stress) குறைப்பதே இந்த தொழில்நுட்பத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த Do Hiemon Box சாதனம் முதற்கட்டமாக தொழிற்சாலைகள், கட்டுமானப் பணித்தளங்கள் மற்றும் கிடங்குகளில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes